Friday, 14 June 2013

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பம்

குரூப்-4 தேர்வுக்கு  விண்ணப்பம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு வரும் ஆக 25 ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இளநிலை உதவியாளர் (பிணையம்) (62), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (3469), தட்டச்சர் (1738), சுருக்கெழுத்து தட்டச்சர் (242), பில்கலெக்டர் (19), வரைவாளர் (30), நில அளவர் (6) என மொத்தம் 5 ஆயிரத்து 566 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. 



தேர்வுக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும்.
தேர்வில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் தாலுகாக்கள் என மொத்தம் 258 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வாணைய இணையதளத்தில் இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, நிரந்தரப் பதிவை வைத்து பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவு செய்து, இப்பதவிக்கான இதர விவரங்களை பதிவு செய்யலாம். நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கிக் கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில், தேர்வுக்கு விண்ணப்பித்த இரண்டு நாள்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.

இது குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

நன்றி :தினமணி 


No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts