நெஸ்ட் - ஜூனியர் 2013 உதவித்தொகை
நேஷ்னல்வைடு எஜூகேஷன் அன்ட் ஸ்காலர்ஷிப் (நெஸ்ட் -
ஜூனியர் 2013) உதவித்தொகையானது +1,
+2 அறிவியல் பிரிவு எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு
உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை: ரூ.20,000/- முதல் ரூ.25,000/-
வரை
தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர். எஸ்.எஸ்.சி., எச்.எஸ்சி புத்தகத்தின் படி அல்லது சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ அல்லது ஸ்டேட் போர்ட் முறைப்படி கேள்விகள்
கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களின் அருகில் உள்ள
தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். விண்ணப்பித்த பின் ஏதாவது மாற்றம்
இருப்பின் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும்.
தேர்வில் பங்கேற்க விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் அபராத
தொகையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.nest.net.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 28ம் தேர்வு நடைபெறுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.nest.net.in/nest-junior.htm என்ற வலைதளத்தை பார்க்கலாம்.

No comments:
Post a Comment