Wednesday, 27 March 2013

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான சேர்க்கை



சென்னையில் உள்ள ஐ.ஐ.டி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், ஆராய்ச்சி படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
Ph.D. மற்றும் M.S. ஆகிய படிப்புகளில் சேர்ந்து தொழில்நுட்ப ரீதியான ஆராய்ச்சிகளைத் தொடர சென்னை ஐ.ஐ.டியில் விண்ணப்பிக்கலாம். முழு நேரப் படிப்பு, இளநிலை முடித்தவர்கள் நேரடியாக சேரும் படிப்பு, மாற்றுத் துறையில் முனைவர் படிப்பு, பகுதி நேர படிப்பு ஆகிய பிரிவுகளில் Ph.D. படிப்புகள் வழங்கப்படுகின்றன. M.S. படிப்பில் சேர்ந்து படித்து, அதிலிருந்து Ph.D. படிப்பில் சேரவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.



Aerospace, Applied Mechanics, Bio-Technology, Chemical, Civil, Chemistry, Computer Science and Engineering, Electrical, Engineering Design, Humanities and Social Sciences, Management Studies, Mathematics, Mechanical, Metallurgical and Materials, Ocean மற்றும் Physics ஆகிய பிரிவுகளில் ஆய்வைத் தொடரலாம். சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை www.research.iitm.ac.in என்ற இணைய தளத்தில் பெறலாம்.
அடிப்படைத் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
சென்னை ஐ.ஐ.டியில் பிஎச்.டி உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பை முடித்தவர்கள், ஆராய்ச்சி படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். தொழில்துறை அல்லது பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரிபவர்கள் பகுதி நேர Ph.D. படிப்புகளில் சேரலாம். ஆராய்ச்சிப் படிப்புகளை இணைந்து நடத்த, பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் சென்னை ஐ.ஐ.டி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள IITM - NUS பல்கலைக் கழகம், திருவனந்தபுரத்தில் உள்ள SCTMST, வேலூரில் உள்ள CMC ஆகிய கல்வி நிறுவனங்களிலும் ஆராய்ச்சியை தொடரலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீடு அளிக்கப்படும். சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை www.research.iitm.ac.in என்ற இணைய தளத்தில் பெறலாம்.
விண்ணப்பங்கள் www.research.iitm.ac.in மற்றும் www.iitm.ac.in ஆகிய இணைய தளங்களில் கிடைக்கும். ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts