Tuesday, 26 March 2013

916 கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணி


916 கால்நடை உதவி மருத்துவ அதிகாரி பணி

மிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர் பணிகளில் 916 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வை நடத்த உள்ளது.

இந்தப் பணியில் சேர (B.V.Sc) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கால்நடை மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்கள்  விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விதவைகள் போன்றவர்களுக்கு வயது உச்சவரம்பு ஏதுமில்லை.



எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. முதல் தாளில் பொது அறிவு குறித்த கேள்விகளும் இரண்டாவது தாளில் கால்நடை மருத்துவ அறிவியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். முதல் தாள் எழுத்துத் தேர்வுக்கு இரண்டு மணி நேரமும், இரண்டாம் தாள்  எழுத்துத் தேர்வுக்கு மூன்று மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு முடிந்தவுடன் நேர்காணல் நடைபெறும்.

 விண்ணப்பக் கட்டணம் ரூ.300. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கியிலோ செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். ஆன்லைனில் செலுத்த விரும்பாதவர்கள் தபால் அலுவலகம் அல்லது இந்தியன் வங்கியில் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.04.2013

தபால் நிலையம் அல்லது வங்கியில் கட்டணத்தை செலுத்த கடைசி தேதி: 03.04.2013

தேர்வு நாள்: 28.04.2013

விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

உதவிக்கு: 044-25300300 அல்லது 18004251002

நன்றி :புதிய தலைமுறை 

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts