Wednesday, 11 July 2012

இக்னோவில் எம்.பி.ஏ: விண்ணப்பிக்க 16ம் தேதி கடைசி-

இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) மேலாண்மைப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இக்னோ நேற்று (10ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2011 ஆகஸ்ட் மற்றும் 2012 பிப்ரவரியில் நடத்தப்பட்ட எம்.பி.ஏ. நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள், இக்னோ வழங்கும் எம்.பி.ஏ. படிப்புக்கு ஜூலை 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.ஏ (Banking and Finance) படிப்புக்கும் ஜூலை 16ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.ஏ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடந்த மே 31ம் தேதி கடைசிநாள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதனை வரும் 16ம் தேதி வரை இக்னோ பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் தாமதக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் இக்னோ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts