இந்தியாவின் வளர்ச்சி தொழில் துறையை பெரிதும் நம்பி இருப்பதும், தொழில்வளர்ச்சி ஆண்டுக்கு 9% என்ற அளவில் இருப்பதும், தொழில் கல்வியை நாம்இன்னும் பல வகையில் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும்என்பதனைக் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இந்தியாவில் தொழிற்கல்வியைதேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளின்எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக தான் உள்ளது.
Gross Enrollment Ratio (GER) எனப்படும் உயர்கல்விக்குச் செல்லும் மொத்தமாணவர்களின் தற்போதைய எண்ணிக்கை 15%லிருந்து 2020ம் ஆண்டிற்குள்30%ஆக உயர்த்த வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும்என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்து உள்ளதுகவனத்தில்கொள்ள வேண்டும்.அதன் அடிப்படையிலேயே பல்வேறுதிட்டங்களை அரசு நிறைவேற்றி வருகின்றது.
தமிழ்நாட்டில் தொழிற்கல்வியை பொறுத்த வரையில் அதிக அளவில் 486பல்தொழில்நுட்பக் கல்லூரிகளும், 570 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
ஒவ்வொரு பெற்றோரும் தன்னுடைய மகன் அல்லது மகளை ஒருமருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆக்க வேண்டும் என்றஆசையில் எந்தவொரு தெளிவும் இல்லாமல் கல்லூரி அல்லதுபாடப்பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பின் விளைவுகளை கண்டுவருத்தப்படுகின்றனர். இது போன்ற இன்னல்களை களைவதற்காக தான்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியின் சார்பாக இந்த ஆக்கம்தரப்படுகிறது. இந்த ஆக்கத்தில் பொறியியல் துறையில் உள்ள அனைத்துபாடப்பிரிவுகளும் அலசி ஆராயப்படும், இன்ஷா அல்லாஹ்.
உயர்கல்விக்குச் குறிப்பாக பொறியியல் துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை அறிந்த பின்புதங்களுடைய பாட தேர்வினை உறுதி செய்வது மிகவும் பொருத்தமாகஇருக்கும்.
- மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமை
- மாணவர்களின் மதிப்பெண்கள்
- தேர்வு செய்யும் கல்லூரியின் தரம் மற்றும் பாடப்பிரிவுகள்
- தேர்வு செய்த துறையின் வருங்கால வாய்ப்புகள்
- தேர்வு செய்த படிப்பின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்
ஒரு மாணவர் தன்னுடைய உயர் கல்விக்கான வாய்ப்பினை சரியானமுறையில் தேர்வு செய்வதன் மூலம் தன்னுடைய வளமான எதிர்காலத்தைஉறுதி செய்ய முடியும். தமிழ்நாட்டில் 570 பொறியியல் கல்லூரிகளும்,அவற்றில் கற்பிக்கப்படும் 50-கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளும் அவற்றில்உள்ள சுமார் 2,00,000 கும் அதிகமான இடங்களும் பற்றிய விவரங்களைவிரிவாகப் பார்ப்போம்.
கடந்த ஆண்டில் (2011) நடந்து முடிந்த பொறியியல் சேர்க்கை முடிவில் சுமார்45,062 காலி இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
கடந்த ஆண்டில் (2011) நடந்து முடிந்த பொறியியல் சேர்க்கை முடிவில் சுமார்45,062 காலி இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
கட்டிடப் பொறியியல் (Civil Engineering)
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக பொறியியல் துறை என்றால் அது கட்டிடப்பொறியியலை மட்டுமே குறித்த காலம் மாறி தற்பொழுது 50க்கும் மேற்பட்டதுறைகள் உள்ளன. அந்த அளவிற்கு பழமையான துறையாக கருதப்படும்இத்துறை தற்பொழுது தனக்கே உரிய முறையில் சீரான வளர்ச்சியைக்கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் தற்பொழுது Civil Engineering படிப்பிற்குசுமார் 263 கல்லூரிகளும், அவற்றில் சுமார் 19500 இடங்களும் உள்ளன.
தமிழக அரசு தமிழ்வழியாக கட்டிடப் பொறியியல் கல்வியைஅறிமுகப்படுத்தியதன் மூலம் தமிழில் ஆர்வம் கொண்ட மாணவர்களும்தங்களுடைய படிப்பை தொடர்கின்றனர். அதிக அளவில் அரசு, தனியார்துறைகளில் வேலை வாய்ப்புகளையும் பெற முடியும். இதன் மூலம் Structural Engineering, Construction Engineering, Environmental Engineering, M. Arch மற்றும் M. Planபோன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த முதுகலை பொறியியல்படிப்புக்களையும் படிக்க வாய்ப்புள்ளது. 2006ம் ஆண்டில் வெறும் 52%மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்த துறையானது, தற்பொழுது 2011ம்ஆண்டில் 90% மேலான இடங்களை நிரம்பப் பெற்றுள்ளது.
வேலை வாய்ப்புகள்:
இந்தியாவில் 'கோர்' எனப்படும் அடிப்படைத் தொழில்களில் ஒன்றாககட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறை திகழ்கிறது. இந்தத் துறையில்வரும் 2020ஆம் ஆண்டு வாக்கில் 40 லட்சம் சிவில் இன்ஜினியர்களுக்கானதேவை ஏற்படும் என்று சமீபத்திய மனித வள மேம்பாடு குறித்த ஆய்வுஒன்று தெரிவிக்கிறது. ராயல் இன்ஸ்டியூட் ஆப் சார்டர்டு சர்வேயர்ஸ்(RICS)என்ற அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி2020ஆம் ஆண்டில் 4 கோடியே 40 லட்சம் பேர் கட்டுமானத் துறையில் பணிபுரிய வேண்டிய தேவை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. 4 லட்சம் சிவில்இன்ஜினியர்கள், 3 லட்சத்து 96 ஆயிரம் ஆர்கிடெக்டுகள் மற்றும் ஒரு லட்சத்து19 ஆயிரம் பிளானர்களுக்கான கூடுதல் தேவை இதனால் ஏற்படும் என்றுகணிக்கப்படுகிறது.
தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறை மற்றும் அதன் கட்டிடப்பணிகள் இந்த படிப்பிற்குரிய வேலை வாய்ப்புக்களை பன்மடங்காக பெருக்கி உள்ளது. DLF உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள் இத்துறையின்வளர்ச்சியை கருத்தில் கொண்டு கால்பதித்து உள்ளது.
தற்பொழுது IT துறையினரும் கட்டிடப் பொறியியல் வல்லுனர்களை அதிகஅளவில் வேலைக்குத் தேர்ந்தெடுப்பது, சுய தொழில் முறை எளிமையாகஇருப்பது, கட்டுமான மேலாண்மை தேவைப்பாடு போன்றவற்றால் அதிகமானஅளவில் மாணவர்கள் இத்துறையை தேர்வு செய்கின்றனர்.
மெக்கானிக்கல் துறை(Mechanical Engineering)
சிவில் படிப்பிற்கு அடுத்தபடியாக நாம் காண இருப்பது மெக்கானிக்கல் துறைஎனப்படும் இயந்திரவியல் துறை. தற்பொழுது உள்ளதொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பழமையான துறைகளும் புத்துணர்ச்சிபெற்று தமக்கென்று தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன. மெக்கானிக்கல் துறையானது என்றுமே சீரான வளர்ச்சியைக் கொண்டதுறையாக விளங்குவதனால் மாணவர்கள் இதன்மீது அதிக ஆர்வம்கொண்டுள்ளனர்.
மெக்கானிக்கல் அமைப்புகளை, நிர்வகிப்பது, வடிவமைப்பது, உற்பத்தி செய்வதுமற்றும் பகுப்பாய்வு செய்வது போன்ற பணிகளுக்காக, இயற்பியல் மற்றும்மெட்டீரியல் அறிவியல் கோட்பாடுகளை பயன்படுத்துவதே, மெக்கானிக்கல்இன்ஜினியரிங் ஆகும்.
பொதுவாக ஆண்களால் அதிகம் தேர்வு செய்யப்படும்துறையாக மெக்கானிக்கல் துறை இருக்கின்றது. தமிழ்நாட்டில் இதற்காக சுமார்438 கல்லூரிகளும், அதில் சுமார் 32,000 கும் அதிகமான இடங்கள்இருப்பதும் இதன் வலிமையை மாணவர்களிடம் உணர்த்துகின்றது. 2008ம்ஆண்டில் வெறும் 54% மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்த துறையானதுதற்பொழுது 2011ம் ஆண்டில் 95% அதிகமான இடங்கள் நிறம்பப்பெற்றன. இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் இத்துறை என்றுமே இளமையாககாட்சியளிக்கின்றது.
Engineering Design, Energy Engineering, Industrial Engineering, Production Engineering,Product Design, Machatronics, CAD / CAM, Manufacturing மற்றும் Aeronauticalபோன்ற வளமையான முதுகலைப் பொறியியல் படிப்புக்களைப்பெற்றிருப்பதும், சுயதொழில் தொடங்குவதற்கான அதிக வாய்ப்புகள்இருப்பதும் மெக்கானிக்கல் துறைக்கு இருக்கும் சிறப்பு ஆகும்.
நாம் முன்னரே குறிபிட்டது போல, மேற்கண்ட துறைகள் மாணவர்களின்ஆர்வத்தினால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். நண்பர்களுக்காகவோ,பெற்றோர்களுக்காகவோ இருக்க கூடாது.
இன்ஷா அல்லாஹ், நம்முடைய அடுத்த ஆக்கத்தில் Computer Science, Information Technology, Marine Engineering, Petroleum Engineering ஆகிய துறைகளைபற்றியும், அதன் வேலைவாய்ப்புகளை பற்றியும் விரிவாக காண்போம்...

No comments:
Post a Comment