Thursday, 12 January 2012

ஸ்நேப் தேர்வு முடிவு ஜனவரி 12ல் வெளியீடு


மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் இது. அதன்படி ஜனவரி 11ம் தேதி கேட் தேர்வு முடிவு வெளியான நிலையில், 12ம் தேதி ஸ்நேப் தேர்வு முடிவு வெளியாகிறது.
சிம்போசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ஸ்நேப் நுழைவுத் தேர்வு கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி இந்தியாவில் 30 நகரங்களில் நடைபெற்றது.
இந்த தேர்வின் முடிவுகளை சிம்போசிஸ் கல்வி நிறுவனம் இன்று வெளியிடுகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள்http://snaptest.org/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவு வெளியானதும், மாணவர்களின் தேர்வுப் பட்டியல் ஜனவரி 18ம் தேதி வெளியாகும்.
புனேவில் பிப்ரவரி 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் நேர்காணல் மற்றும் குழுக் கலந்துரையாடலுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.
படிப்புகளில் சேர தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும். மாணவர்கள் தங்களது கல்விக் கட்டணத்தை செலுத்த மார்ச் 7ம் தேதி கடைசியாகும். படிப்புகள் ஜுன் 5ம் தேதி துவங்க உள்ளது.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts