இந்தியாவில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க அறிமுகப்படுத்தப்பட்ட சிமேட் நுழைவுத் தேர்வு 2013ம் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் பிப்ரவரி 20 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை சிமேட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது . இந்த நிலையில் 2013 ம் கல்வியாண்டில் இருந்து ஒரு ஆண்டுக்கு இரு முறை சிமேட் தேர்வை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது .
இது குறித்து தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்தியக் கவுன்சிலின் தலைவர் மந்தா கூறுகையில், முதல் தேர்வு பிப்ரவரி மாதமும் , இரண்டாவது தேர்வு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமும் நடத்தப்படும் . ஒரு ஆண்டில் இரு முறை தர்வு நடத்துவதற்குக் காரணம் , இரண்டு மதிப்பெண்களில் அதிகமான மதிப்பெண்ணை மாணவ சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . மேலும் , மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார் .

No comments:
Post a Comment