Thursday, 12 January 2012

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம்


சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவின் கீழ் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சி.பி.எஸ்.இ. கல்வி நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 2 பாட தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 4ம் தேதி நடத்துவதாக இருந்த சட்டப்பேரவைத் தேர்தலை மார்ச் மாதம் 3ம் தேதிக்கு தள்ளி வைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் மார்ச் 3ம் தேதி நடைபெற இருப்பதால், அன்றைய தினம் (மார்ச் 3ம் தேதி சனிக்கிழமை) பிளஸ் 2 மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொலிடிகல் சயின்ஸ் மற்றும் லென்டிங் ஆபரேஷன்ஸ் தேர்வுகள் ஏப்ரல் 16ம் தேதிக்கு(திங்கள்கிழமை) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தின் கீழ் தேர்வெழுதும் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இந்த தகவல் சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்துக்கும் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் குறித்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
முதலில் சிபிஎஸ்இ அறிவித்த தேர்வு அட்டவணையின்படி பிளஸ் 2 பொதுத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதியோடு நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது தேர்வு தள்ளி வைக்கப்படுவதால் ஏப்ரல் 16ம் தேதியன்று  தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts