சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி நிறுவனம் வாயிலாக படித்து தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் 3ம் தேதி வெளியாக உள்ளது.
எம்.பி.ஏ., பி.எம்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ். மற்றும் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த ஜுன் மாதம் நடைபெற்றது.
இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர் 3ம் தேதி இரவு 8 மணி முதல், சென்னை பல்கலைக்கழக www.unom.ac.in/ இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியல் மாணவர்களின் வீட்டு முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலமாக அனுப்பப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டி.லியோ அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்த விவரங்கள் தேர்வு முடிவு வெளியாகும் அன்று தெரிவிக்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகம் அஞ்சல்வழிக் கல்வி இயக்குநரகம் மூலமாக பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

No comments:
Post a Comment