இந்தியாவின் பாதுகாப்பிற்கு அடிப்படையான முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தில் வெட்னரி சயின்ஸ் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேவைகள்: இந்திய ராணுவத்தின் veterinary corps பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பி.வி.எஸ்சி., அல்லது பி.வி.எஸ்சி.,யுடன் அனிமல் ஹஸ்பெண்டரி பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாகப் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: எஸ்.எஸ்.சி., அடிப்படையில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் உங்கள் விண்ணப்பங்களை முதலில் நிரப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது சிவப்பு நிற மையினால் "Application for Short Service Commission in RVC" என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். இதன் பின்னர் விண்ணப்பங்களப் பின் வரும் முகவரிக்கு சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற பின் வரும் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
முகவரிDirectorate General Remount Veterinary Services (RV&I),
QMG's Branch, Integrated Hq. of MoD (Army) West Block,
3, R.K.Puram, New Delhi -110066.
No comments:
Post a Comment