Sunday, 16 June 2013

பி.இ. கலந்தாய்வு வெளியூர் மாணவர்களுக்கு 50% பஸ் கட்டண சலுகை‏..

பி.இ. கலந்தாய்வு வெளியூர் மாணவர்களுக்கு 50% பஸ் கட்டண சலுகை..

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பி.இ. கலந்தாய்வில்பங்கேற்க வெளியூரிலிருந்து வரும் மாணவர்களுக்கு பஸ் கட்டணத்தில் 50 சதவீதம்சலுகை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கலந்தாய்வுக்காக மாணவர்கள் தங்களுடன் அழைத்து வரும் ஒருவருக்கும் 50 சதவீதபஸ் கட்டண சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சென்னை மாவட்டம் தவிர பிறமாவட்டங்களிலிருந்து பி.இ. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களும், அவர்கள் உடன்அழைத்து வரும் ஒருவரும், அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் சலுகைக்கட்டணத்தில் பயணிக்கலாம்.  50 சதவீத கட்டண சலுகை இருவழிப்பயணத்தின்போதும் வழங்கப்படும். இந்த சலுகையைப் பெற, மாணவர்களின்கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தின் நகலை அரசுப் போக்குவரத்துக் கழகஅலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


அந்தக் கடிதத்தின் நகலில் அலுவலர் சான்றளித்த பின் சலுகைக் கட்டணத்தில்பயணிக்கலாம். கலந்தாய்வு முடிந்து திரும்பிச் செல்லும்போதும் அதேநடைமுறையைப் பின்பற்றுமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts