Friday, 14 June 2013

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்

னியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலேயே (சி.இ.ஓ.)விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் அதே அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் உள்ள அறிமுக வகுப்புகளில், 25 சதவீத இடங்களை ஏழைகள், சமூக ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.

இந்த ஒதுக்கீடு தொடர்பாக பெற்றோர்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், இந்த இடங்களுக்கு அதிகமானோர் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், தனியார் பள்ளிகளிடமும் இந்த விண்ணப்பங்களை வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்தது.

எனவே, இந்த இடங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்பதோடு, மாணவர் சேர்க்கைக்கு இரண்டு வாரங்கள் கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் தவிர பிற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழைகள், சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த 25 சதவீத இடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) அறிமுக வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெறலாம்.

இந்த விண்ணப்பத்தைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்கலாம்என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

ஏழைகள் என்பது எப்படி வரையறுக்கப்பட்டுள்ளது?

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை, ஆண்டுக்கு 2 லட்சத்திற்குக் குறைவான வருமானமுடைய பெற்றோர் என வரையறுக்கிறது (G.O (Ms) No 174 School education (c2) department Govt. of Tamilnadu Notification III dated 08.11.2011) ஏழைகள் மட்டுமன்றி, சமூகத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த (disadvantaged)குழந்தைகளுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும். நலிந்த பிரிவு என்பதை மத்திய அரசு SC, ST மற்றும் சமூக, கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்கள், மொழிச் சிறுபான்மையினர் என வரையறுத்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு இவர்களோடுகூட தாய், தந்தையரை இழந்த குழந்தைகள், HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினர், நகர சுத்தித் தொழிலாளர்களின் (scavenger) குழந்தைகள் என்பவர்களையும் இந்தப் பிரிவில் சேர்த்து ஆணையிட்டிருக்கிறது.


நன்றி :புதிய தலைமுறை 

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts