மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (ஜெ.என்.டி.யூ), எம்.பி.ஏ., படிப்புக்கு தகுதியான
மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.ஏ.,(மனிதவளம், நிதியியல், சந்தை மேலாண்மை)
கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்
இளநிலை பட்டப்படிப்புடன், அந்த துறையில் ஒரு வருட பணி அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன்
ரூ.1000 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். JNT University, Director,
Kutapally, Hyderabad - 500085 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை
அனுப்பலாம்.
தேர்வு முறை:
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்
நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஏப்ரல் 6 விண்ணப்பிக்க கடைசி நாளாக
அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விரிவான
தகவல்களுக்கு www.jntuh.ac.in/new என்ற இணையதளத்தை அணுகலாம்.

No comments:
Post a Comment