ஜிஏடிஇ தேர்வென்பது, பொறியில் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்று. அத்தேர்வை எழுதி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. பொறியியல் துறையில், எம்.இ., எம்.எஸ்., மற்றும் எம்.டெக்., போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேரலாம்.
இல்லையெனில், கேட்(GATE) தேர்வின் மூலமாக, பட்டதாரிகளை பணியமர்த்தும், BHEL, NTPC, Indian Oil Corporation, HPCL, BPCL, Power Grid போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
கல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்
பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்(IISc), ஐஐடி.,கள் மற்றும் என்ஐடி.,கள் ஆகியவற்றில் மேற்கொள்ளக்கூடிய ஏராளமான படிப்புகள் இருக்கின்றன. இந்தப் படிப்புகள் பொதுவாக எம்.இ., மற்றும் எம்.டெக்., வகையைச் சேர்ந்தவை. இதன்மூலம், தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
ஒருவர் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்புகளைப் பெறுவதென்பது, அவரின் GATE மதிப்பெண்கள், நல்லொழுக்கம் மற்றும் படிக்கும் ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்தது.
நல்லொழுக்க வகைப்பாடு
பொதுவாக, கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்றவை, மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் படிப்புகள். இந்தத் துறைகளுக்குள், சில பிரிவுகள், நல்ல மேலான வாய்ப்புகளைக் கொண்டவை. உதாரணமாக, கடந்த சில வருடங்களாக, மேனுபேக்சரிங் பொறியில் படிப்பானது, மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது. இத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எல்க்ட்ரிகல் இன்ஜினியரிங்
VLSI (Very Large scale integration)
Communication Technology
Power Systems
Power Electronics
Communication Technology
Power Systems
Power Electronics
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
Design Engineering
Manufacturing Engineering
Manufacturing Engineering
இந்தியா மட்டுமின்றி, உலகளவில் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகமான கட்டுமானப் ப ணிகளால், சிவில் இன்ஜினியரிங் படிப்பு, புத்துணர்வு பெற்று, ஒரு தனி மதிப்பை மீண்டும் பெற்றுள்ளது. இதுதவிர, கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேஷன், ரிலையபிலிட்டி இன்ஜினியரிங் போன்ற துறைகளும் அதிகளவிலான வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன.
பணி வாய்ப்புகள்
மேலே குறிப்பிட்ட பணிகள், தொழில்நுட்பம் மற்றும் மனித மேலாண்மை ஆகியவற்றுடன், தொழில்நுட்ப செயல்பாட்டில் புத்தாக்கத்தைக் கொண்டதாகும். சில படிப்புகள், எம்.எஸ்.,(Masters in Science) பட்டத்தை வழங்குகின்றன. அவை, அதிகளவில் ஆராய்ச்சி தொடர்பானவை. இந்தப் படிப்பானது, கல்வி நிலையம் அல்லது தொழில் நிறுவனங்களில் ஆராய்ச்சி தொடர்பான பணி வாய்ப்புகளை அளிக்கின்றன. ஆராய்ச்சித் துறையில் சிறப்பான வாய்ப்புகளைப் பெற, ஒருவர் பிஎச்.டி., படிப்புகளையும் மேற்கொள்ளலாம்.
பணியைத் தேர்ந்தெடுத்தல்
GATE மதிப்பெண்ணை வைத்திருப்பவர்களுக்கு, அரசு மற்றும் Public sector under takings நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான பணி வாய்ப்புகள் உள்ளன. இவை, உயர்தர பணிகள். இவற்றில், பயிற்சி மற்றும் கற்றல் வாய்ப்புகள் அதிகம். இவற்றில் கிடைக்கும் மாதச் சம்பளம், வருடத்திற்கு 10 லட்சம் வரையில் இருக்கும். எனவே, சிறந்த GATE மதிப்பெண்களை வைத்திருப்போர், சிறந்த பணி வாய்ப்புகளைப் பெறுவதும் புத்திசாலித்தனமே.
சிறந்த கல்வி நிறுவனங்களும், அவற்றில் GATE மதிப்பெண்கள் மூலம் இடம்பெறும் விகித முறையையும் விளக்கும் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
GROUP
|
GENERAL RULE FOR APPLYING
|
IISc Bangalore, IIT Bombay
|
AIR - 100 for Direct Admission to most courses,
up to AIR 600 for some courses
|
IIT Kanpur, IIT Delhi, IIT Madras
|
Up to AIR 300 for most courses
|
IIT Kharagpur
|
Up to AIR 600 for most courses
|
IIT Roorkee, IIT Guwahati, IT BHU
|
Up to AIR 1000
|
NITs, Jadavpur university, IIT Hyderabad, IIT Patna etc.,
|
Up to AIR 1500
|
Government Engineering colleges
|
Up to AIR 2500
|
Private Engineering colleges
|
Above AIR 2500
|

No comments:
Post a Comment