தேர்வுத்துறை விரைவில் அறிமுகம்
10, பிளஸ் 2 தேர்வு விவரங்கள் சரிபார்க்க புதிய முறை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட விவரங்களைசரிபார்த்துக் கொள்ள வசதியாக ஆன்லைன் முறையை தேர்வுத் துறை அறிமுகப்படுத்த உள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆண்டுதோறும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் உள்ளிட்ட 14வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. இவற்றுக்கு உரிய மதிப்பெண் பட்டியல்கள் தேர்வுத்துறை மூலம்வழங்கப்படுகிறது.
ஆனால் சில நேரங்களில் மாணவர்கள் அந்த மதிப்பெண் பட்டியல்களை தொலைத்துவிடுகின்றனர். அல்லதுகளவு போதல், தீயில் எரிந்து போதல் உள்ளிட்ட சம்பவங்களால் மதிப்பெண் பட்டியல்களை இழந்துவிடுகின்றனர். இதுபோல பாதிக்கப்பட்டவர்கள், மனு செய்து மீண்டும் வாங்குவதற்கு கால தாமதம் ஆகிறது.அதை தவிர்ப்பதற்காக புதிய முறையை தேர்வுத் துறை கொண்டுவர உள்ளது.
இதன்படி ஆன்லைன் சரிபார்ப்பு, டிஜிட்டல் முறையில் பதியப் பட்ட ஆவணங்கள் ஆகியவை மூலம் மாணவர்கள்தங்கள் மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்லைன் சரிபார்ப்பு முறையில் கடந்த 1997ம் ஆண்டு முதல் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்பற்றிய விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. மதிப்பெண் பட்டியல்களை சரிபார்த்துக் கொள்ள விரும்புவோர் தேர்வுத்துறை கட்டணம் செலுத்த வேண்டும். அதற்காக ஒரு குறியீட்டு எண் வழங்கப்படும். அந்த எண்ணை ஆன்லைனில் பதிவு செய்தால் அந்த மாணவரின் மதிப்பெண் குறித்த விவரங்கள் தெரியவரும். தேர்வுத்துறை பதிவு செய்துள்ள மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் தேசிய தகவல் மையத்துக்கு அனுப்பி அதன் மூலம் இணைய தளத்தில் வெளியிட உள்ளனர்.
ஆவணங்கள் பதிவுப்பணி
அதேபோல டிஜிட்டல் ஆவண பாதுகாப்பையும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 1970ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் முதல் 2000 ஆண்டு வரை தேர்வு எழுதியவர்கள், 1978ம் ஆண்டு முதல்2000ம் ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களின் ஆவணங்கள் டிஜிட்டல் முறையின் கீழ் பதிவு செய்யும் பணிகள் எல்காட் மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து செய்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு, ஒவ்வொரு மாணவரின் ஆவணத்தையும் எளிதில் பார்க்க முடியும். மதிப்பெண் பட்டியல் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட ஆவணங்களை தேடி எடுக்கும் சிரமங்கள் இதன் மூலம் குறைகிறது.மேற்கண்ட இந்த இரண்டு முறைகளும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
நன்றி : தினகரன் 28.12.2012
சென்னை,

No comments:
Post a Comment