Thursday, 28 June 2012

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

 மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
நடப்பு கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள், கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 5ம் தேதி, காலை 9 மணிக்கு, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும், காலை 10 மணி முதல், கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 பெற்ற பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
ஜூலை 6ம் தேதி முதல், 12ம் தேதி வரை, தினமும் காலை 9 மணியிலிருந்து 2 மணி வரை, 199.75 முதல் 195.75 வரை மதிப்பெண் எடுத்துள்ள, பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.
கட்-ஆப் 195.75 முதல் 195.50 வரை மதிப்பெண் பெற்றுள்ள, பொது பிரிவினருக்கு, 13ம் தேதி, காலை 9 மணிக்கும், 195.50 முதல் 194.75 வரை மதிப்பெண் எடுத்துள்ள, பி.சி.எம்., பிரிவினருக்கு, 11 மணிக்கும், 195.50 முதல் 194 வரை, மதிப்பெண் பெற்றுள்ள, எம்.பி.சி., பிரிவினருக்கு, 11.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையும், கலந்தாய்வு நடக்கிறது.
ஜூலை 14 மற்றும் 16ம் தேதிகளில், எஸ்.சி., - எஸ்.சி.ஏ., - எஸ்.டி., பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். இப்பிரிவுகளைச் சேர்ந்தோர் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான, கட்-ஆப் மதிப்பெண், கலந்தாய்வு கட்டணம், கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை, www.tnhealth.org இணையதளத்தில் பெறலாம்.
கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதோர், ஜூலை 3ம் தேதி www.tnhealth.org என்ற இணையதளத்தில் அக்கடிதத்தை பதிவிறக்கம் செய்து, குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மருத்துவக் கல்வி இயக்கக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts