Wednesday, 28 December 2011

ஐஐடி கராக்பூரில் எல்எல்.பி. படிப்பு-


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காராக்பூர் வழங்கும் எல்எல்.பி. (ஹானர்ஸ்) படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு 2012, மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது.
தொழிற்கல்வியில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். பார்மசி, அறிவியல் துறையில் முதுநிலை பட்டம் உள்ளவர்களும், எம்.பி.ஏ., முதல்நிலையில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்திற்கான கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 2012, மார்ச் 26ம் தேதியாகும். விண்ணப்பங்களை தபாலிலோ, நேரிலோ சமர்ப்பிக்க ஏப்ரல் 2ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர், கொல்கட்டா, மும்பை, டெல்லி நகரங்களில் மட்டுமே எழுத்துத் தேர்வு நடைபெறும். எல்எஸ்ஏடி தேர்வெழுதும் மாணவர்களுக்கு இத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். எல்எஸ்ஏடி இந்தியா 2012 ரேங்க் அடிப்படையில் இவர்கள் குழு கலந்துரையாடல், நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts