Wednesday, 28 December 2011

10ம் வகுப்பு பொதுத் தேர்வு : 10.75 லட்சம் பேர் பங்கேற்பு


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை கோப்பு, முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஓரிரு நாளில், அட்டவணை வெளியாக உள்ளது.
கடந்த தேர்வை விட, 66 ஆயிரத்து, 7 மாணவர்கள் கூடுதலாக (6.53 சதவீதம்), தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டதை தொடர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு அட்டவணையையும் தேர்வுத் துறை தயாரித்தது.
இது தொடர்பான கோப்பு, கடந்த வியாழன் அன்று, முதல்வரின் ஒப்புதலுக்காக சென்றுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு அட்டவணை, ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்., 16 தேதி தேர்வுகள் துவங்க உள்ளன.  சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு பள்ளிகளை சேர்ந்த, 10 லட்சத்து, 75 ஆயிரத்து, 649 மாணவர்களும், ஒரே வகையான தேர்வை எழுத உள்ளனர்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts