சென்னை, செப். 10: அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டய, சான்றிதழ் படிப்புகள் மற்றும் மருத்துவ பதிவேடு அறிவியல் உள்ளிட்ட 24 வகையான படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த படிப்புகளில் சேர பிளஸ் 2-வில் அறிவியல் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செவிலியர் உதவியாளர் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
இதற்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், கிண்டியில் உள்ள கிங் நிலையத்திலும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 200 ஆகும். கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கி வரைவோலையாக -செயலர், மருத்துவம் சார்ந்த கல்விக் குழுமம், கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிண்டி, சென்னை - 32- என்ற பெயரில் எடுத்து செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் அருந்ததி வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ர்ஸ்ண்ய்ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் இணையதளம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment