Tuesday, 9 April 2013

Indian Institute of Management-ல் மேலாண்மை சார்ந்த முதுநிலைப் படிப்பிற்கான சேர்க்கை


Indian Institute of Management-ல் மேலாண்மை சார்ந்த முதுநிலைப் படிப்பிற்கான சேர்க்கை

திருச்சியில் உள்ள Indian Institute of Management-ல் மேலாண்மை சார்ந்த முதுநிலைப் படிப்பில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் 3 ஆண்டு கால மேலாண்மை படிப்பு மாலை நேரப் படிப்பாக வழங்கப்படுகிறது. இந்த படிப்பில் சேர விரும்புவோர் சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஐ.ஐ.எம் சேர்க்கை மையத்தை அணுகவும்.


ஏப்ரல் 14 மற்றும் 28-ஆம் தேதிகளில் ஐ.ஐ.எம் திருச்சி மையத்தின் பேராசிரியர்களையும்,
தற்போது படித்து வரும் மாணவர்களையும் சந்தித்து ஆலோசனை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப மே மாதம் ஒன்றாம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

45, நேரு தெரு, ரமணியன் சித்தார்த் பில்டிங், முதல் தளம், 
தொழிற்பேட்டை வடக்கு பகுதி, ஈக்காட்டுத் தாங்கல், 
சென்னை - 600 032.
கூடுதல் விவரங்களுக்கு www.iimtrichy.ac.in என்ற இணைய தளம் மற்றும் pgpbminfo@iimtrichy.ac.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். 
அல்லது 044 - 2225 5565 மற்றும் 044 - 2225 5566 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டும் விவரங்களை அறியலாம்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts