Saturday, 23 February 2013

ஐ.ஐ.எப்.டி.,யில் பணி வாய்ப்பு



ஐ.ஐ.எப்.டி.,யில் பணி வாய்ப்பு


இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பாரின் டிரேடு என்ற நிறுவனம் ஐ.ஐ.எப்.டி., என்ற பெயரால் அனைவராலும் அறியப்படுகிறது. இந்த நிறுவனம் 1963ல் நிறுவப்பட்டது. சர்வதேச வர்த்தகத்தில் தொழில்முறை ரீதியிலான முன்னேற்றம் பெறவும், இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலும் இது துவங்கப்பட்டது.
தற்போது இந்த நிறுவனம் சர்வ தேச அளவில் இயங்குவதுடன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு உந்துதியாகவும் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் உள்ள புரொகிராம் அஸோஸியேட்ஸ் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.



தேவைகள்
ஐ.ஐ.எப்.டி., நிறுவனத்தின் புரொகிராம் அஸோஸியேட்ஸ் பதவிக்கு எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., ஆகிய ஏதாவது ஒரு படிப்பை எந்தப் பிரிவிலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதே படிப்பை பிரசித்தி பெற்ற சர்வதேச நாடுகளின் பல்கலைக் கழகங்களின் வாயிலாக முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிக்கும் தேதியில் இந்தப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இது தவிர ஆங்கில மொழியில் எழுத மற்றும் பேசுவதில் சிறந்த திறன் தேவைப்படும். இவைதவிர இன்டர்நெட் பயன்பாடு, எம்.எஸ்., வேர்டு, எக்ஸெல் போன்ற ஆபிஸ் பேக்கேஜ்களும் தெரிந்திருப்பது அவசியத் தேவையாகும்.
வேறு என்ன விபரங்கள்
மாதம் ரூ.23 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் ஐ.ஐ.எப்.டி.,யின் புரொகிராம் அஸோஸியேட்ஸ் பதவிக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பின்வரும் இமெயில்
முகவரிக்கு உங்கள் தற்போதைய கரிகுலம் விடேயுடன் 25.02.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முழு விபரத்தை பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.02.2013
இமெயில் முகவரி
recruitmentkol@iift.ac.in
இணையதள முகவரி
http://cc.iift.ac.in/docs/iift/PA_KOL_06022013.pdf

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts