நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்படும் அனைத்து முதுநிலை படிப்புகளுக்கும், 2013 முதல் மாணவர்களை சேர்ப்பதற்கான பொது நுழைவுத்தேர்வு, நவம்பர் 23 முதல் டிசம்பர் 6 வரை நடத்தப்படவுள்ளது. இத்தேர்வு NEET - PG என்று அழைக்கப்படுகிறது.
தேசிய தேர்வு வாரியம் இந்த நுழைவுத்தேர்வை நடத்துகிறது. இந்தியா முழுவதிலுமுள்ள 350 மருத்துவ கல்லூரிகளில், ஏறத்தாழ 20,000 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இவற்றில், எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐ மற்றும் பாண்ச்சேரி ஜிப்மர் ஆகியவை அடங்காது. இத்தேர்வானது, நாடு முழுவதும் மொத்தம் 34 நகரங்களில், பல்வேறான மையங்களில் நடத்தப்படவுள்ளது.
NEET - PG தேர்வைப் பற்றிய முழு விபரங்களை அறிய www. nbe. gov. in/neetpg.

No comments:
Post a Comment