அரசு ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற உள்ள எம்.பி.ஏ.,-எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு, 11ம் தேதி முதல், 30ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 500 எம். பி. ஏ. இடங்களுக்கும், 11 ஆயிரத்து500 எம். சி. ஏ. இடங்களுக்கும், கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், ஜூன் 11 முதல், 30 வரை வழங்கப்படும் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும், தேர்வு செய்யப்பட்ட 42 கல்வி நிறுவனங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
அருந்ததியர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், 150 ரூபாய்க்கான டிடி., மற்றும் ஜாதிச்சான்றிதழ் நகலை கொடுத்து, விண்ணப்பங்களைப் பெறலாம். மற்றவர்கள், 300 ரூபாய்க்கான டிடி., யை கொடுக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை," செயலர், தமிழ்நாடு எம். பி. ஏ.,- எம். சி. ஏ., சேர்க்கை-2012, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை-13" என்ற முகவரிக்கு எடுக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும், மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை இரண்டாவது வாரத்தில், கோவை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் எனவும், இதற்கான கடிதம், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு தபால் மூலம் அனுப்பப்படும் எனவும், தொழில்நுட்ப பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment