Wednesday, 25 April 2012

எம்.பி.ஏ., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு -

மிசோரம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்ந்து பயில அழைப்பு விடுத்துள்ளது.


இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும் (எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவு மாணவர்கள் 45 சதவீத) மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மாணவர்கள் கேட், மேட், சாட், சிமேட் போன்ற நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு மற்றும் குழுக்கலந்துரையாடல் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


விண்ணப்பங்களை இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணமாக ரூ.700ம் (எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ.350ம்) டிடி எடுத்து மிசோரம் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


ஜூன் 19ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.mzu.edu.in/MBA%20Admission%20Form.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். 

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts