Tuesday, 24 April 2012

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தை மே 2க்குள் முடிக்க உத்தரவு-

 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை மே 2க்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5,557 பள்ளிகளைச்சேர்ந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதியுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 2ல் துவங்கின. இப்பணியை வரும் மே 2க்குள் முடிக்கவும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை மே 6க்குள் முடிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த 10 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிட வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts