Tuesday, 27 December 2011

ஏழை மாணவர்களுக்கு சிபிஎஸ்இயில் இலவசக் கல்வி


சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 25 ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்ற சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. தலைவர் வனீத் ஜோஷி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நுலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்த வனீத் ஜோஷி, பின்னர் செய்தியாளர்களிடமும் பேசினார்.
அவர் அளித்த பேட்டியில், கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கு மட்டுமானதல்ல. ஏழை, பணக்காரன் என்றில்லாமல், எல்லா சமுதாய மாணவர்களுக்கும் பொதுவானதாகும். சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களாகவே இருப்பர். இதனைமாற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவ சேர்க்கையின் போது 25 சதவீதம் ஏழை மாணவர்களையும் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு முற்றிலும் இலவசமான கல்வியை பாரபட்சம் இன்றி அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மிக கவனமாக இருக்கும். அதேப்போன்று அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த சட்டத்தை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts