சென்னை: மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் மற்றும் நான்காம் கட்ட கவுன்சிலிங், 7ம் தேதி அம்பேத்கர் சட்ட பல்கலையில் நடக்கிறது.
இதுகுறித்து, சட்ட பல்கலை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அரசு சட்டக் கல்லூரிகளில், மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட மற்றும் நான்காம் கட்ட கவுன்சிலிங், பல்கலை வளாகத்தில் 7ம் தேதி நடைபெறும்.
தகுதியான மாணவர்களுக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கிடைக்கப் பெறாதவர்கள், கவுன்சிலிங் ஒருங்கிணைப்பாளர்களை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment