ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட அணுகசிவு சம்பவத்திற்கு பிறகு உலகம் முழுவதும் இதுதொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஐ.ஐ.டி., மும்பை கல்வி நிறுவனம் முதுநிலை பட்டப்படிப்பில் ஸ்பெஷலைசேஷன் இன் நியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை இந்தாண்டு முதல் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்புதலை அண்மையில் பெற்றுள்ளது.
இந்த படிப்பில் அணுஉலையில் நடக்கும் பணிகள் குறித்து விரிவாக கற்பிக்கப்படும். இந்தாண்டு இப்படிப்பில் எட்டு மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். அணுஉலைகளில் பணியாற்ற தேவையான திறமையான பொறியாளர்களை உருவாக்குவதே இப்படிப்பின் முக்கிய நோக்கமென ஐ.ஐ.டி., மும்பையின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் எஸ்.எல்.பாபட் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment