Monday, 29 August 2011

எம்.பி.ஏ. படிக்க பட்டதாரிகளுக்கு சிறப்பு வாய்ப்பு -29-08-2011


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலை தூர கல்வி நெல்லை கல்வி மையத்தில் நுழைவுத் தேர்வு இல்லாமல் ஆறு பிரிவுகளை கொண்ட எம்.பி.ஏ மேலாண்மை இரு ஆண்டு படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப் படிப்பு முடித்து பணியில் இருப்பவர்கள் புரொபஷனல் எம்.பி.ஏ ஒரு ஆண்டில் படிக்கலாம்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலை தூர கல்வி மையத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
பட்ட மேற்படிப்பில் எம்.எஸ்சி இயற்பியல், வேதியியல், சுற்றுசூழல் கல்வி, கணிதம், உளவியல், சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.ஏ தமிழ், ஆங்கிலம், இந்தி, வரலாறு, கிரிமினலாஜி, பொது நிர்வாகம், தகவல் பரிமாற்றம், செய்தி பிரிவு, பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
கம்ப்யூட்டர் பிரிவில் எம்.சி.ஏ 2 ஆண்டு படிப்பாகும். பி.சி.ஏ படித்தவர்கள் மற்றும் டிகிரியுடன் பி.ஜி.டி.சி.ஏ படித்தவர்கள் இதில் சேரலாம். டிப்ளமோ படித்தவர்கள் பி.சி.ஏ 2 ஆண்டுகளில் படிக்கலாம். பி.ஜி.டி.சி.ஏ டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் உடனடி சேர்க்கை நடந்து வருகிறது.
பட்டப் படிப்பில் பி.எஸ்சி கணிதம், உளவியல், பி.பி.ஏ, பி.பி.எம், பி.காம், பி.காம். கம்ப்யூட்டர், பி.ஏ தமிழ், ஆங்கிலம் இந்தி, இஸ்லாம், அராபிக், பொருளாதாரம், நூல் அறிவியல், பி.லிட் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு அட்மிஷன் நடக்கிறது.
பட்ட மேற்படிப்பு டிப்ளமோ பிரிவில் நுகர்வோர் உரிமைகள், மனித உரிமைகள், வரி காப்பீடு, ஏற்றுமதி, இந்தி, யோகா, ஆங்கில பயிற்சி, மியூசிக், ஆஸ்பிடல் மேலாண்மை உட்பட 14 பிரிவுகளுக்கும், டிப்ளமோ பிரிவில் 13 பிரிவுகளுக்கும், சான்றிதழ் பாட பிரிவில் 9 பிரிவுகளுக்கும் நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
ஏற்கனவே பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் கூடுதல் பட்ட மேற்படிப்பு ஒரு ஆண்டிலும், ஏற்கனவே பட்ட படிப்பு படித்தவர்கள் கூடுதல் பட்ட மேற்படிப்பு ஒரு ஆண்டில் படிக்கலாம்.
இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அடுத்த ஆண்டிற்கான படிப்பை இங்கு தொடரலாம். அட்மிஷன் மற்றும் மேலும் விபரங்களுக்கு பல்கலை., நெல்லை கல்வி மையத்தை (0462 - 4020304, 94873 00588) தொடர்பு கொள்ளலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts