மருத்துவம் சார் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில், தனியார் கல்லூரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டில் 4,041 இடங்கள் காலியாக உள்ளன.
மருத்துவம் சார் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்றுடன் முடிந்தது. இதன் முடிவில், அரசு கல்லூரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.பி.டி., ஆகிய படிப்புகளில், எஸ்.சி., பிரிவில் தலா ஒரு இடம் காலியாக உள்ளன.
தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், பி.எஸ்சி., நர்சிங் - 4,041; பி.பார்ம்., - 957; பி.பி.டி., - 619 இடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறும் போது, மருத்துவம் சார் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 21ம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை நடக்கும்.
இன்று (11ம் தேதி) அரசு கல்லூரிகளில் உள்ள 240 டி.பார்ம்., இடங்களுக்கும், வரும் 13ம் தேதி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள, 69 அரசு ஒதுக்கீடு பி.டி.எஸ்., இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது என்றார்.

No comments:
Post a Comment