தொலைதூர கல்வி – தொழில் சார்ந்த (Professional Education) படிப்புகளுக்கு உண்டா??
- Mohamed Abbas
தொலைதூர கல்வி – இன்று வரை தொழில் படிப்புக்கு அனுமதி வழங்கவில்லை என்பது தான் உண்மை.
இது சம்பந்தமாக MINISTRY OF HRD வெளியிட்டுள்ள அறிக்கையில் “பொறியியல் படிப்புகளுக்கு கண்டிப்பாக தொலைதூர கல்வி நடைமுறை படுத்த மாட்டாது என்றும். AICTE மற்றும் DCE போன்ற அமைப்புகளும் இதே கருத்தை தெளிவு படுத்துகிறது.
சில கல்லூரிகள் இது சம்பந்தமாக பாட பிரிவுகள் ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை கூட நடத்த படுவதாக கேள்வி பட்டு இருக்ககூடும். ஆனால் கீழ் கண்ட “AICTE NOTIFICATION” பாருங்கள்.இதில் அந்த அமைப்பின் அறிவிப்பை நமக்கு தெளிவு படுத்துகிறது.
பொறியியல் படிப்புகள் PART TIME ஆக 3 ஆண்டுகளுக்கு என்ற வகையில் பயிலலாம். இதற்கு “TANCET – Tamil Nadu Common Entrance Test” நுழைவு தேர்வு மற்றும் “TANCA – Tamil Nadu Common Admission” ஒற்றைசாளர முறையான சேர்க்கையும் நடைபெறும். இது குறித்து நமது கல்வி களஞ்சியம் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
தொலைதூர முதுகலை (Distance Education For PG) பட்ட படிப்புகளை பொறுத்த வரை M.B.A M.C.A மற்றும் M.SC ஆகிய இவைகளுக்கு தான் அனுமது உள்ளது. மேலும் BITS பிலானியில் மட்டும் தான் M.S Programme தொலைதூர பாடபிரிவு உள்ளது.
இந்த பதிவு (செய்தி) கல்வி களஞ்சியம் www.kalvikalanjiam.com இணையதளத்தில் இருந்து எடுத்ததற்கு அடையாளமாக "நன்றி" மற்றும் எங்களின் இணையதள முகவரியை பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
ReplyDeleteஇப்படிக்கு
கல்விகளஞ்சியம்